நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டேவிஸ் கோப்பை  அரையிறுதியில் செர்பியா

மாட்ரிட்:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் கஜகிஸ்தானை வீழ்த்திய செர்பிய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. 

டேவிஸ் கோப்பை ஆடவர் குழு டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் ஸ்பெயினின் மாட்ரிட், இத்தாலியின் டுரின், ஆஸ்திரியாவின் இன்ஸ்புருக் நகரங்களில் நடக்கிறது.

மாட்ரிட்டில் நேற்று நடந்த 2ஆவது காலிறுதி ஆட்டங்களில் செர்பியா-கஜகிஸ்தான் அணிகள் மோதின. 

முதல் ஒற்றையர் பிரிவில் கஜகிஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கின் 7-6(7-5), 4-6, 7-6(13-11)என்ற செட்களில் செர்பியாவின் மியோமின் கெமனோவிச்சை போராடி வீழத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர் செட்களில் கஜகிஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை சாய்த்தார். 

தொடர்ந்து இரட்டையர் பிரிவில் செர்பியாவின் நிகோலா காக்ச், நோவக் ஜோகோவிச் இணை  6-2, 2-6, 6-3 என்ற செட்களில் கஜகிஸ்தானின் ஆந்த்ரே கெருபெவ், அலெக்சாண்டர் நெடோவ்யேசோவ் இணையை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset