நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து உலகில் வரலாறு படைத்த ஹாரி கேய்ன்

முனிச்:

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேய்ன் கிளப் கால்பந்து போட்டிகளில் அதிவேகமாக 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலண்ட் அடித்ததைவிட குறைவான போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பண்டேஸ் லீகா கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வார்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஹாரி கேய்ன் இரு கோல்களை அடித்தார்.

இதன் மூலம் ஹாரி கேய்ன் பாயர்ன் முனிச்  அணிக்காக 100 கோல்களை 104 போட்டிகளில் நிறைவு செய்துள்ளார்.

ஐரோப்பாவின் முதல் 5 கால்பந்து கிளப் போட்டிகளில் இவர்தான் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset