நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் விபத்தில் சிக்கிய 12 மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது

புத்ராஜெயா:

இந்தியாவில் விபத்தில் சிக்கிய 12 மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது.

தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நேற்று நடந்த சாலை விபத்தில் 12 மலேசியர்கள் சிக்கினர்.

இந்த மலேசியர்களின் நிலைமையை சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது.

அதன்படி, அனைத்து மலேசியர்களும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலைப்பாங்கான சாலை நிலைமைகள் காரணமாக 12 மலேசியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா வேன் சறுக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விபத்து குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறவும், 

மலேசிய பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளவும் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு துணைத் தூதரகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset