
செய்திகள் விளையாட்டு
இலங்கை தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆகி ஜிம்பாப்வேயிடம் தோற்றது
ஹராரே:
ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ரஜா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அது ஏன் என்று பிட்சைப் பார்க்கும் போதுதான் தெரியவந்தது. இலங்கை அணி 80 ரன்களுக்குச் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவும் சமீராவின் வேகத்துக்குத் திக்குமுக்காடினாலும் ரியான் பர்ல் மற்றும் தஷிங்க முஷேகிவாவின் பங்களிப்பின் மூலம் 14.2 ஓவர்களில் 84/5 என்று வெற்றி பெற்றது.
பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே பவுலர் முசரபானி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை 37/4 என்று சரிந்தது.
சரித் அசலங்கா 18 ரன்களையும் தசுன் சனகா 15 ரன்களையும் எடுக்க ஒருவழியாக 75 ரன்களைக் கடந்து 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்குச் சுருண்டது.
ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சிகந்தர் ரஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிகந்தர் ரஜா தன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை.
அபாய வீரர் கமிந்து மெண்டிசை 4வது பந்தில் டக் அவுட் ஆக்கினார் ரஜா. தன் 3வது ஓவரில் கேப்டன் சரித் அசலங்கா, சமீராவை வீழ்த்தி 4 ஓவர்களில் 11/3 என்று ரஜா ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.
- முத்துக்குமார்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am