நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டத்தோ சங்கர் கிண்ண கால்பந்து போட்டியில் சிகாம்புட் தமிழ்ப் பள்ளி சாம்பியன்

கோலாலம்பூர்:

புளூ பிரதர்ஸ் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகள் இடையிலான டத்தோ சங்கர் கிண்ண கால்பந்து போட்டியில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில்  புக்கிட் ஜாலில், சன் பெங், சிகாம்புட் ஏ, சிகாம்புட் பி,  பூச்சோங் கின்ராரா, பூச்சோங் சத்யா சாய் ஆகிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி நிர்வாக துணை தலைமை ஆசிரியர் உஷா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் குமார்,  பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வீரா, சிகாம்புட் தமிழ்ப் பள்ளி கால்பந்து குழு பயிற்றுநர் ராஜேந்திரன் வேலு ஆகியோர் உட்பட பலரும் போட்டி நடைபெற முழு ஒத்துழைப்பை நல்கினர்.

Blues Brothers சமூக நல இயக்கத்தின் தலைவர் சமாட் தலைமையில் பூளூ பிரார்தஸ் உறுப்பினர்கள் இந்த போட்டிக்கு முழு ஆதரவு வழங்கினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிகாம்புட் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்று சாம்பியன் வென்றது.

அதே வேளையில் பூச்சோங் சத்யா சாய் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

புக்கிட் ஜாலில் தமிழ்ப் பள்ளி மூன்றாவது இடத்தையும் சன் பெங் தமிழ்ப் பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset