நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புளூ பிரதர்ஸ் சமூக நல சங்கத்தின் ஏற்பாட்டில் கூட்டரசுப் பிரதேச, சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் மொத்தம் ஆறு பள்ளிகள் பங்கேற்றன.

புக்கிட் ஜாலில், சன் பெங், சிகாம்புட் ஏ, சிகாம்புட் பி, பூச்சோங் கின்ராரா, பூச்சோங் சத்யா சாய் ஆகிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிகாம்புட் தமிழ்ப் பள்ளி நிர்வாக துணை தலைமை ஆசிரியர் உஷா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் குமார்,  பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வீரா, சிகாம்புட் தமிழ்ப் பள்ளி கால்பந்து குழு பயிற்றுநர் ராஜேந்திரன் வேலு ஆகியோர் உட்பட பலரும் போட்டி நடைபெற முழு ஒத்துழைப்பை நல்கினர்.

Blues Brothers சமூக நல இயக்கத்தின் தலைவர் சமாட் தலைமையில் புளூ பிரதர்ஸ் உறுப்பினர்கள் இந்த போட்டிக்கு முழு ஆதரவு வழங்கினர்.

Blues Brothers இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் டத்தோ சங்கர் பெயரில் நடத்தப்பட்ட இந்த கால்பந்து போட்டியை காண பாலா, சலிம், குணா, ரஹ்மான், ரஃபி, மைக்  ரமேஷ், தில்லை, அப்பு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுசித்ரா, சாரா ஆகியோரும்  சிறப்பு வருகை புரிந்தனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்தோம். 

மேலும் சகோதரர் ஜீவா வழங்கிய ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று  சமாட் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset