
செய்திகள் விளையாட்டு
ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும்
புதுடெல்லி:
இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது.
14ஆம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்திய அணி பங்கேற்கலாம். அதேநேரத்தில் அந்தப் போட்டியை பாகிஸ்தான் நடத்தினால், அதில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றம் தணிந்தால் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு அணிகளும், தனிப்பட்ட வீரர்களும் பங்கேற்கலாம்.
அந்தப் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் அல்லது வீரர்களும் கலந்துகொண்டு விளையாடலாம்.
அதேபோல், இந்தியா நடத்தும் இது போன்ற பல்வேறு நாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும் அணிகளும் பங்கேற்க முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am