நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டியில் தம்புசாமி, காஜாங் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

சுங்கைபூலோ:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டியில் தம்புசாமி, காஜாங் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கால்பந்து போட்டியில் 100  தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.

இதில் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு  தம்புசாமி தமிழ்ப் பள்ளியும் நோர்ட் ஹாம்பர்க் தமிழ்ப் பள்ளியும் தேர்வு பெற்றன.

இதில் தம்புசாமி தமிழ்ப்பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் நோர்ட் ஹாம்பர்க் தமிழ்ப் பள்ளியை வீழ்த்தி நமச்சிவாயம் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத்தையும் வென்றது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த நோர்ட் ஹாம்பர்க் தமிழ்ப்பள்ளிக்கு கிண்ணமும் 1,500 வெள்ளி வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை காஜாங் தமிழ்ப் பள்ளி, நான்காவது இடத்தை காப்பார் மெத்தடிஸ்ட் தமிழ்ப் பள்ளி பிடித்தன.

பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு  காஜாங், ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தேர்வு பெற்றன.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில் பெனால்டியில் வெற்றி பெற்ற காஜாங் தமிழ்ப்பள்ளி ரவிந்திரன் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத்தையும் வென்றது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த ஹைலண்ட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கு 1,500 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் பிரிவில் 3ஆவது இடத்தை துன் சம்பந்தன் தமிழ்ப் ம்பள்ளியும் 4 ஆவது இடத்தை பத்துஅராங் தமிழ்ப்பள்ளியும் பிடித்தன.

எப்ஏஎஸ் உதவித் தலைவர் டத்தோ சுகு, மீபா தலைவர் அன்பானந்தன், பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணா, பொருளாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset