
செய்திகள் விளையாட்டு
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
லண்டன், ஜூலை 12:
கடந்த வாரம் ஸ்பெயினில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த போர்ச்சுகீஸ்யைச் சேர்ந்த முன்னணி வீரர் டியோகோ ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுப்பதாக பிரீமியர் லீக் சாம்பியன்களான லிவர்பூல் கால்பந்து அணி, அறிவித்துள்ளது.
இந்த முடிவு, ஜோட்டாவின் மனைவி ரூத் மற்றும் அவரது குடும்பத்துடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டது. இதனால் இனி லிவர்பூல் அணியின் ஆண்கள், பெண்கள் மற்றும் அகாடமி அணிகள் உட்பட லிவர்பூல் கிளப்பின் எந்தவொரு நிலைப்பாட்டிலும் இந்த எண் இனிமேல் பயன்படுத்தப்படாது.
"இது லிவர்பூல் கிளப் வரலாற்றில் இந்த வகை மரியாதை செய்யப்படும் முதல் நடைமுறை இதுவாகும். இது ஒரு அற்புதமான மனிதருக்கான, தனிப்பட்ட மரியாதை. இந்த எணை ஓய்வுசெய்வதன் மூலம், அந்த எண்ணும், அவரும் நிரந்தரமாக நிலைத்திருப்பார்கள் என லிவர்பூல் கிளப்பின் உரிமையாளர்கள் Fenway Sports Group-இன் கால்பந்து பிரிவு தலைமை செயல் அதிகாரி மைகேல் எட்வர்ட்ஸ் கூறினார்.
2020ஆம் ஆண்டு லிவர்பூலில் சேர்ந்த ஜோட்டா, அந்த ஆண்டு கிளப்புக்கு 20வது பட்டத்தை வெல்ல உதவினார். அதே ஆண்டு ஜெர்சி எண் 20ஐ பெருமையுடன் அணிந்தார்.
"அவர் எங்கள் எண் 20. என்றும் அவர் எங்கள் எண்ணாகவே இருப்பார்," என கிளப் செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
டியோகோ ஜோட்டா (வயது 28) மற்றும் அவரது சகோதரர், ஆந்த்ரே சில்வா, ஜூலை 3 ஆம் தேதி வடமேற்கு ஸ்பெயினில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தனர்.
— Reuters
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am