செய்திகள் விளையாட்டு
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
வாஷிங்டன்:
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இந்தர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இதில் இந்தர்மியாமியும் நியூ இங்கிலாந்து அணியும் அண்மையில் மோதின.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 2-1 என வென்றது.
இதில் 27, 38ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் அடித்த இரண்டு கோல்களின் மூலம் இளம் வயதில் 870 கோல்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
18 அடி பாக்ஸுக்கு வெளியே இருந்து 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
அதிவேகமாக 870 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி தன்வசமாக்கியுள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இரண்டு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 12, 2026, 10:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
May 11, 2026, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
May 11, 2026, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் நெருங்கியுள்ளது
May 10, 2026, 10:17 am
