செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
சென்னை:
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 21 முதல் 25-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 2:29 pm
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
June 26, 2026, 4:12 pm
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு
June 25, 2026, 2:17 pm
அரசுப் பேருந்தில் பெரம்பூருக்கு பயணித்த முதல்வர் விஜய்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
