நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை மாநகரில் ஆகஸ்ட்11 முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: 

தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார்.

பேருந்​துகளை மின்​னேற்​றம் செய்​வதற்​கான கட்​டு​மானப் பணி​கள், பராமரிப்​புக் கூடம் உள்​ளிட்ட வசதி​களு​டன் ரூ.47.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட வியாசர்​பாடி மின்​சா​ரப் பேருந்து பணிமனையை​யும் அவர் திறந்து வைத்​தார்.
 
இதைத் தொடர்ந்​து, பெரும்​பாக்​கம் மின்​சா​ரப் பேருந்து பணிமனையை பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரும் நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டன. இதன் பகு​தி​யாக மாநகர போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் பிரபு சங்​கர், அதி​காரி​களு​டன் கடந்த 6-ம் தேதி பணிமனை​யில் ஆய்வு செய்​தார்.

இதைத் தொடர்ந்து ஆக.11-ஆம் தேதி முதல் மின்​சார ஏசி பேருந்​துகள் இயக்​கப்​படும் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது. 

அதன்​படி முதல்​கட்​ட​மாக 55 மின்​சார ஏசி பேருந்​துகளும், 80 மின்​சா​ரப் பேருந்​துகளும் பெரும்பாக்கம் பணிமனையி​லிருந்து இயக்கப்படவுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset