
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெக மாநாடு: விஜய் அறிவிப்பு
சென்னை:
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் வீறுகொண்டு வெற்றிநடை போடுகிறது. இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
எனவே, மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 21 ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, கழகத் தோழர்கள் வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 4:52 pm
ஏர் இந்தியா விமானம் சென்னையில் திடீர் தரையிறக்கம்
August 9, 2025, 5:32 pm
சென்னை மாநகரில் ஆகஸ்ட்11 முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்
August 8, 2025, 8:58 pm
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
August 8, 2025, 5:09 pm
நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஸ்
August 8, 2025, 11:54 am
கவின் ஆணவக் கொலை: கைதான எஸ்ஐ, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்
August 8, 2025, 8:35 am