நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சைவ, வைணவத்தை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய திமுக அமைச்சர் பொன்முடி: திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிப்பு 

சென்னை: 

இந்து சமயத்தை இழிவாகவும் காமத்தோடு தொடர்புப்படுத்தியதுடன் சைவம், வைணவத்தைத் தவறாக சித்திரித்து பேசிய திமுக அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் வலுத்துள்ளது 

இந்நிலையில் திமுகவின் துணைப்பொது செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார் 

திமுக தலைமை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது

பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

பொன்முடியின் பேச்சு திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது 

திமுகவின் புதிய துணைப் பொதுசெயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தற்போது அறிவித்துள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset