
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக முன்னிலை: திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி அறிவாலயத்தில் கொண்டாட்டம்
சென்னை:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதையொட்டி திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் திமுகவின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனால், அண்ணா அறிவாலயம் திமுக தொண்டர்களால் களைக்கட்டியது. இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார்.
அப்போது அவருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி இனிப்பு வழங்கினார். இதனை பெற்று கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 13,000 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 12:13 pm
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க பழனிசாமி தீவிர முயற்சி
March 31, 2025, 4:27 pm
அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரமலான் வாழ்த்து
March 29, 2025, 8:17 pm
திமுக, பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய் அதிமுக குறித்து பேசாததற்கு காரணம் என்ன?: இபிஎஸ் விளக்கம்
March 29, 2025, 11:29 am
மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவின் ஆட்சி: விஜய் குற்றச்சாட்டு
March 22, 2025, 4:34 pm
மணிப்பூர் போல் நாம் ஆக்கப்படுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
March 21, 2025, 4:53 pm