செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஏர்ஆசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: திருச்சியில் பரபரப்பு
திருச்சி:
ஏர்ஆசியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்படை ஏற்படுத்தியது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்பாக விமானி விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் விடுதியில் அரை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது.
இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 4:12 pm
ஶ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
December 26, 2024, 3:05 pm
இண்டிகோ விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
December 26, 2024, 11:01 am
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: கைதானவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
December 24, 2024, 6:09 pm