நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பகைவரையும் நேசிக்கச் சொன்ன இயேசுவின் அன்புவழியைக் கடைப்பிடிப்போம்: கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையைத் தவிர்த்து ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று பொறுமையையும், ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதை கொடுத்து விடுங்கள் என்று ஈகையையும், பகைவர்களையும் நேசியுங்கள், என இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
 
போர்கள், வெறுப்புணர்வால் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. 

அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset