நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

'நான் அதிகம் யோசிப்பதில்லை, நிறைய யோசித்தால் குழப்பத்தில் போய் முடியும்': வெற்றிக்குப்பின் எம்எஸ் தோனி

துபாய்:

ஐபிஎல் 2021 தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி (16 ரன்கள்) சேர்ந்த பின் கேட்ச் ஆகி வெளியேறினார். 

இதையடுத்து இறங்கிய கேப்டன் தோனி தனது பொறுப்பை உணா்ந்து ஆடி 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 18 ரன்களை விளாசி சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் சிஎஸ்கே அணி, ஐபிஎல் அரங்கில் 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

CSK's MS Dhoni says his 'innings was crucial'; praises DC's bowling attack  after reaching final of IPL 2021, Sports News | wionews.com

இப்போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, 
“இந்த சீசனில் இதுவரை நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் எனது ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். வலைப்பயிற்சிகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன். 

"ஆனால் நான் நிறைய யோசிப்பதில்லை, ஏனெனில் அதிகம் யோசித்தால் பேட்டிங்கில் திட்டங்களை குழப்பிக் கொள்வதில் போய் முடியும். குறிப்பாக, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். 

"கடந்த சீசனில் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் இருந்தது, வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் கடினமாக உழைப்போம்” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset