நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி 2024: அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது 

கோலாலம்பூர்: 

பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில்
டிரீம் ஸ்கை ஹோம் புரொடக்‌ஷன் மற்றும் கெடா மாநிலக் கபடிக் கழகம் ஆதரவில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி 2024 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது 

எதிர்வரும் 5ஆம் தேதி அக்டோபர் மாதம், சனிக்கிழமையன்று காலை மணி 7 முதல் மாலை 7 மணிவரை DEWAN MINTERK, சுங்கை பட்டாணி, கெடாவில் இந்த போட்டி நடைபெறவுள்ளது 

இந்தக் கபடிப் போட்டி விளையாட்டுக்குச் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மலேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் திருமதி. சரஸ்வதி கந்தசாமி,  நாடறிந்த கொடை நெஞ்சர் தொழில் அதிபர் மேதகு திரு. "சிங்கப்பூர்" சின்னையா நாயுடு மற்றும் அவர்தம் துணைவியார் திருமதி. ஜோபினா நாயுடு அவர்களும், மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் இயக்குனர் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றன

இந்தக் கபடிப் போட்டியில் நாடளவிலான 12 குழுக்கள் களம் காண்கின்றன. வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்ல தரமான திறமையான போட்டியாளர்கள் பலரும் பலப் பரீட்சையில் இறங்குகின்றனர்.

பொது மக்களும் கபடி பிரியர்களும் இந்தக் கபடிப் போட்டி விளையாட்டைக் கண்டு களிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கெடா மாநிலக் கபடிக் கழகத்தின் தலைவர் திரு. சதாசிவம் அவர்களும் அவர்தம் நிர்வாக உறுப்பினர்களும், பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு. இல.விக்னேஷ் பிரபுவும் அவர்தம் குழுவினரும் அன்போடு அழைக்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset