நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா தோல்வி

பொகாதோ:

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில்  அர்ஜெண்டினா அணியினர் தோல்வி கண்டனர்.

மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் கொலம்பியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 1-2  என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வி கண்டனர்.

கொலம்பியா அணியின் வெற்றி கோல்களை யார்சன் மோஸ்கியூரா, ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஈக்குவடோர் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பொலிவியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset