நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காற்று  குறியீடு மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற அளவீடகவுள்ளது

ஷா ஆலம்:

இன்று மதியம் 2 மணி நிலவரப்படி மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு அளவுகள் பதிவாகியுள்ளன. 

அதில் பந்திங், கோலா லங்காட் (157) அதிகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

நீலாய், நெகிரி செம்பிலான் (108) மற்றும் செரஸ், கோலாலம்பூர் (109) என காற்று மாசு குறியீடு பதிவு செய்துள்ளதாகச் சுற்றுச்சூழல் துறையால் இயக்கப்படும் மலேசியா காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின்  இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், 42 பகுதிகள் சராசரி அளவீடு (51-100) பதிவு செய்தன மற்றும் 23 பகுதிகள் 50க்கும் குறைவான அளவீடுகளைக் கொண்டுள்ளன.

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் காற்று மாசுக் குறியீடு பற்றிய தரவு வெளியிடப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset