நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் வீட்டுக் காவல் விவகாரம்; அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை: ஃபாஹ்மி ஃபாட்சில்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பின் வீட்டுக் காவல் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.

ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான ஃபாஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தினார்.

நஜீப்பின் தண்டனைகளை குறைத்த 16ஆவது மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா, எஞ்சிய 6 ஆண்டுகள் சிறையை வீட்டுக் காவலில் அனுமதிக்க அனுமதி தந்துள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு நஜீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நஜீப் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஃபாஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset