நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10.5 கிலோ ஷாபு வகை போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு 

அலோர் ஸ்டார்: 

கடந்த புதன்கிழமை கோத்தா கோலா மூடாவில் 347,000 வெள்ளி மதிப்புள்ள 10.5 கிலோ எடையிலான ஷாபு வகை போதைப் பொருள் கடத்தல் முயற்சியைக் கெடா மாநிலச் சுங்கத்துறை முறியடித்துள்ளது. 

தஞ்சோங் டாவாய் கடல் அமலாக்க குழு மாலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான படகைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அப்பகுதியைச் சுற்றி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையினர் இருந்ததாக கெடா மாநிலச் சுங்கத்துறை இயக்குநர் நோர் ஈஜா அப்துல் லத்தீஃப் கூறினார்.

சுங்கை பாசார் பிசிக், கோத்தா கோலா மூடாவின் முகத்துவாரத்தில் பதிவு எண் இல்லாத மீன்பிடி படகைக் கண்டறிந்த குழுவினர், நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு சந்தேகத்திற்கிடமான மனிதர்கள் வந்து படகை பெரிய கடல் நோக்கிச் செலுத்தியதைக் கண்டுள்ளனர். 

சட்ட அமலாக்கப் பணியாளர்கள் இருப்பதை உணர்ந்த சந்தேக நபர் காணாமல் போகும் முன் ஆற்றின் முகப்பில் குதித்ததாக என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், சோதனையின் விளைவாக, படகின் சேமிப்பு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் 10 பழுப்பு நிறப் பொட்டலங்களைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

இந்தப் போதைப் பொருளைக் கடல் வழியாக சட்டவிரோதமாக அண்டை நாடான இந்தோனேசியாவுக்குப் படகு மூலம் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். 

பல இலாபங்களைப் பெறுவதற்காக அண்டை நாடுகளில் இந்த போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுவதாகவும், போதைக்கு அடிமையான 100,000 பேருக்கு விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதில் இந்தக் கைப்பற்றல் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்றாலும், படகின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது என்று ஈஜா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset