நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: 

மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.

மக்களவைத் தேர்தலில் தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிதம்புரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

மக்களவைத் தேர்தலில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset