நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி

புது டெல்லி:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

2018-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் இந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை 2017இல் தில்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, 2018இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றத்தின் 7 வெவ்வேறு நீதிபதிகள் விசாரித்து கடைசியாக 8வது நீதிபதி தினேஷ் குமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளித்துள்ளார். மே மாதம் முதல் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset