நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னையில் புதன்கிழமை காலை முதல்கட்டமாக 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 17 வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை பாபு, வேலூர் டாக்டர் பசுபதி, நீலகிரி யோகேஷ் தமிழ்ச்செல்வன், சிவகங்கை சேகர்தாஸ், திருவண்ணாமலை கலியபெருமாள், தருமபுரி அசோகன், தூத்துக்குடி சிவசாமி வேலுமணி, பெரம்பலூர் சந்திரமோகன், திருப்பூர் அருணாச்சலம், நெல்லை சிம்லா முத்துசோழன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீபெரும்புதூரில் பிரேம்குமார், கள்ளக்குறிச்சியில் குமரகுரு, திருச்சியில் கருப்பையா, கோவையில் ராமச்சந்திரன், கன்னியாகுமரியில் பசுலியான் நசரேத், பொள்ளாச்சி கார்த்திக் அப்புசாமி, புதுச்சேரியில் தமிழ்வேந்தன், ஆகியோர் அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வாணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset