நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறைகள் சர்ச்சை மீண்டும் நடக்கக் கூடாது கேகே மார்ட்டுக்கு  ஜாஹித் அறிவுறுத்து

சிலிம் ரிவர்:

அல்லாஹ் என்ற வார்த்தைக் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததால் ஏற்பட்ட தவறை கேகே மார்ட் மீண்டும் செய்ய வேண்டாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.

இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் 3ஆர் எனப்படும் மதம், இனம், ஆட்சியாளர் ஆகியவரற்றை  வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

கேகே மார்ட் மன்னிப்புக் கேட்டிருந்தாலும் அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

சிலிம் ரிவர் மாரா அறிவியல் கல்லூரியில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்வுக்கு பின் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.

இது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல, அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

நேர்மையற்ற ஒருசில தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்டது.

தேசிய நல்லிணக்கத்தைப் பேணவும், மதம், இனம், ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகளை விளையாட வேண்டாம்.

அனைத்து மலேசியர்களுக்கும் நினைவூட்டும் மாட்சிமை தங்கிய மன்னர் சுல்தான் இப்ராஹிமின் நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset