
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை:
மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை அகிய இந்திய கமிட்டியின் ஒப்புதலுக்காக தமிழக கமிட்டு அனுப்பி வைத்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் அளித்த பிறகு, நாளை காலை காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm