
செய்திகள் தமிழ் தொடர்புகள்
முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்கத் திட்டமிட்டுள்ள அசாம் மாநில பாஜக அரசு: ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை:
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று நித்தம் அசாம் மக்கள் மனதில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார் அம்மாநில பாஜக அரசின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஷர்மா. இது கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
நேற்று முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஷர்மா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்குவதாக அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், என்பது காலங்காலமாக முஸ்லிம் மக்களின் திருமணங்கள், விவாகரத்தை அங்கீகரித்து வந்த சட்டமாகும்.
இந்தச் சட்டத்தின் படி, நியமிக்கப்படும் பதிவாளர், திருமணங்களையும் விவாகரத்து போன்ற தகவல்களைப் பதிவேட்டில் பதிவு செய்து நிர்வகித்து வருவார்.
தற்போது, அசாம் பாஜக அரசு, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அத்தகைய 94 பதிவாளர்களின் பதிவேட்டை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் அப்பட்டமான செயல் ஆகும். மேலும், அத்தகைய பதிவாளர்களின் பதவியை முற்றிலும் ஒழிக்கவும், இழப்பீடாக 2 லட்சத்தை அவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அசாமில் இனி முஸ்லிம்கள் தமது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியாவின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க, நித்தம் புதிய நாடகத்தை அசாம் முதல்வர் பிஸ்வா அரங்கேற்றி வருகிறார்.
பெரும்பான்மை மக்களின் மத்தியில், இந்த முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை வைத்து வெறுப்பு உணர்வை விதைக்கும் வேலையை இன்று பட்டவர்த்தனமாகச் செய்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெளிப்படையான பாசிசமாகும்.
இந்தப் பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அசாம் அரசின் இந்தப் பாசிச நடவடிக்கையை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm