நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஜெயலலிதாவின் சொத்துகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும்,  இந்த வழக்கின் கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்கவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் நீதிபதி மோகன் வெளியிட்ட உத்தரவில், கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை மார்ச் 6, 7ம் தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2014ஆம் ஆண்டு அன்றைய சிறப்புநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம்,  உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐந்து இரும்புப் பெட்டிகளில் கொண்டுவரப்பட்டு அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset