நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

எடப்பாடி முன்னிலையில் நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தார்

சென்னை: 

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி இன்று சந்தித்தார். 

எடப்பாடி முன்னிலையில், கவுதமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகினார்.

ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை கவுதமியும் அதிமுகவில் தற்போது இணைந்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset