நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேருக்கு தடுப்புக் காவல்

ஜொகூர்பாரு:

மிரட்டிப் பணம் பறித்த விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் இதனை தெரிவித்தார்.

ஶ்ரீ அலாம் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், போதைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 8 பேருக்கு எதிராக இந்தக் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக மிரட்டி 35 ஆயிரம் ரிங்கிட் பணம் பறித்ததாக புகார்கள் கிடைக்கப் பெற்றன.

பிப்ரவரி 5ஆம் தேதி கிடைத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜொகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்கு 6 முதல் 9 நாட்களுக்கு தடுப்பு காவல் விதித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

விசாரணை செயல்பாட்டில் குறுக்கிடக்கூடிய ஊகங்களைச் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார்.

போலிஸ் படை மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், அதன் அதிகாரிகளிடையே உள்ள நேர்மை பிரச்சினைகள், குற்றவியல் தவறான நடத்தைகளை எதிர்த்துப் போராட ஜொகூர் போலீஸ் உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset