நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல்வாதிகளுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: பிரதமர் 

ரெம்பாவ்:

அரசியல்வாதிகளுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்யும் திட்டம் முதலில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசியல்வாதிகள் ஓய்வூதிய சீர்திருத்தத்தில் இருந்து விலக்கப்பட்டால் அதை புரிய வைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஆகவே தார்மீகப் பொறுப்பாக, இந்த விஷயத்தை முன்வைத்து முழுமையாக விளக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியல்வாதிகளைப் பற்றியும், நடைமுறையில் வேறு இருக்கிறதா என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். 

ஆகையால் நாம் ஒன்றாக விவகாரத்தை மதிப்பாய்வு செய்தால் அது நியாயமானது.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால், அரசியல்வாதிகளும் வேண்டாம். 

ஆனால் அது நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு உட்பட்டது. அமைச்சரவை ஒப்புக்கொண்டால், நான் அதை நாடாளுமன்றத்தில் முன்வைப்பேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை நிராகரிக்க விரும்பினால் அது அவர்களுடைய முடிவு என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset