நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏர் ஆசியா பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது

கோலாலம்பூர்:

நடுத்தர தூர விமான நிறுவனங்களான ஏர் ஆசியா எக்ஸ் மற்றும் தாய் ஏர் ஆசியா உட்பட ஏர்ஏசியா ஏவியேஷன் குழு 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

இதனை ஏர்லைன் ரேட்டிங்ஸ்.கோம் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு விமான நிறுவனத்தின் நற்பெயருக்கும் தரத்திற்கும் பாதுகாப்பு முக்கிய அம்சமாகும் என்று ஏர் ஏசியா ஏவியேஷன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி போ லிங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதில் தனது குழுமம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எல்லா நேரங்களிலும் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் (IATA) சர்வதேச செயல்பாட்டு பாதுகாப்புத் தணிக்கை (IOSA) சான்றிதழ் உட்பட, ஒட்டுமொத்த விமானக் குழுவிற்கும், மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கான உலகளாவிய அளவுகோலாக, பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் கூறினார். 

உலகின் ஒரே விமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு நிறுவனமான ஏர்லைன் ரேட்டிங்ஸ்.கோம், 385 விமானங்களின் பட்டியலின் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டிற்கான 20 பாதுகாப்பான குறைந்த கட்டண விமானங்களை அறிவித்தது.

20 பாதுகாப்பான குறைந்த கட்டண விமானங்களைத் தீர்மானிக்கும் காரணிகளில் சம்பவ பதிவுகள், விமான வயது, விமான நிர்வாகக் குழு, சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (ICAO) மேற்கொண்ட தணிக்கை முடிவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை பட்டியல் ஆகியவை அடங்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset