
செய்திகள் தமிழ் தொடர்புகள்
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை 144 ரயில்கள் ரத்து
புதுடெல்லி:
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வரும் 4-ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் 7 ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm