செய்திகள் விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
மொகாலி :
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் களமிறங்கினர்.
மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவித்து, அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து 277 ரன்களைக் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்குத் துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கத்தைக் கொடுத்தது.
இருவரும் முறையே 71 ரன்களையும், 74 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 58 ரன்களைச் சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 10:08 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2025, 10:07 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
