செய்திகள் தொழில்நுட்பம்
எலான் மஸ்க்கின் புதிய கட்டுப்பாடுக்கு டிவிட்டர் தலைமை செயல்முறை அதிகாரி ஆதரவு
மென்லோ பார்க் :
டிவிட்டர் நிறுவனம் தங்களின் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களைப் பார்க்க முடியும் என்பதில் புதியக் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றது. இது பற்றி கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டுதான் இதற்கு முக்கியக் காரணமாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் கட்டுப்பாட்டின் மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிவிட்டர் பதிவுகளைப் பார்க்க முடியும்.
டிவிட்டர் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உறுதிப்படுத்தப்பட்ட டிவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6000 பதிவுகளைப் பார்க்க இயலும் நிலையில் உறுதி செய்யப்படாத பயனர்கள் ஒரு நாளில் 300 பதிவுகளை பார்க்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் விதித்தார்.
பின், இதில் சில மாற்றங்கள் செய்து உறுதிப்படுத்தப்பட்ட டிவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 10000 பதிவுகளைப் பார்க்க இயலும் நிலையில் உறுதி செய்யப்படாத பயனர்கள் ஒரு நாளில் 1000 பதிவுகளை பார்க்க முடியும்.
மேலும், உறுதி செய்யப்படாத புதியப் பயனர்கள் தினமும் 500 பதிவுகளைப் பார்க்க முடியும் என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு டிவிட்டரின் தலைமை செயல்முறை அதிகாரி லிண்டா யாக்காரினோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், டிவிட்டர் தளத்தை வலுப்படுத்தப் பெரிய நகர்வுகளைச் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் "தீவிர நிலைகளை" ஊக்கப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, தங்கள் தளத்திலிருந்து ஸ்பேம்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் லிண்டா குறிப்பிட்டார்.
- அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm