செய்திகள் தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக மாற்றம் செய்வதற்கான புதிய அம்சம் அறிமுகம்
மென்லோ பார்க் :
மெட்டா தலைமை செயலதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியைப் பாதுகாப்பாகவும், அதிவேகமாக அவற்றை மாற்றம் - டிரான்ஸ்பர் செய்வதற்கும் புதிய அம்சத்தினை அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியமாகும்.
கடந்த சில மாதங்களாகச் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பதும் இரண்டிலும் இணைய வசதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். பழைய தொலைப்பேசியின் செட்டிங்ஸ் -- சாட் - சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின், புதிய தொலைபேசியின் மூலம், பழைய தொலைபேசியின் திரையில் காணப்படும் QR கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம். - டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களைப் பெறுவதற்கு Accept ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகின்றது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm