
செய்திகள் தொழில்நுட்பம்
முகநூல், இன்ஸ்டாகிராமில் செய்தி பரிமாற்றம் இனி நிறுத்தப்படும்: மெட்டா அதிரடி முடிவு
கனடா :
கனடாவிலுள்ளஅனைத்து பயனர்களுக்கும் முகநூல், இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் கூறியிருக்கின்றது.
இதன்படி, கனடா தகவல் தொடர்பு துறையினர்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இவர்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளைத் தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின் பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.
இந்த வாரம் முகநூல், கூகுள் நிறுவனங்களைக், கனடாவின் அதிகாரிகள் சந்தித்ததாகவும், புதியச் சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார்.
அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, 'பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்' இருப்பதாகவும் கூறிய அவர், "இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது" என்றும் தெரிவித்திருந்தார்.
ஆதாரம்: www.thecanadianpress.com
தொடர்புடைய செய்திகள்
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
March 1, 2025, 2:19 pm
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை
January 21, 2025, 2:45 pm
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
January 18, 2025, 11:38 am