நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ரீல்ஸ்-ஐப் பதிவிறக்கம் செய்து பகிரும் வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகம்

மென்லோ பார்க் :

இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கின்றது. இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு ரீல்ஸ்-ஐ பதிவிறக்க செய்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகின்றது.

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புதிய அம்சம் பற்றிய தகவலைத் தனது பிராட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ நேரடியாக தங்களது சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு பகிர்வு ஐகான் மற்றும் பதிவிறக்கம் ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய அம்சம் பயனர் உருவாக்கும் தரவுகளின் மீது அதிக கட்டுப்பாடு வழங்குவதோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் உருவாக்கும் தரவுகளைக் கொண்டாட வழி செய்கிறது. நிறுவனங்கள் சார்பில் வீடியோக்களை நேரடியாகப் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதால், இதே போன்ற வசதி மற்ற தளங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்னதாக டிக்டாக் செயலியும் இதேபோன்ற வசதியைப் பயனர்களுக்கு வழங்க ஆரம்பித்தது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் வீடியோக்களில் டிக்டாக் லோகோவுடன் மற்றவர்களுக்கு பகிரப்படும். இது டிக்டாக்கிற்கு விளம்பரமாக அமைகின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset