நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

நத்திங் போன் 2-இன் டைப் சி கேபளிலும் வித்தியாசம்

கலிப்போர்னியா : 

நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் அனைத்துலகச் சந்தையில் ஜூலை 11-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது.

நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.

நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அம்சங்களைப் பொருத்தவரைப் புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset