
செய்திகள் தொழில்நுட்பம்
ரியல்மி ஏர் பட்ஸ் 5 ப்ரோ விரைவில் அறிமுகம்- டீசர் வெளியீடு
சென்சென் :
ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போthu ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.
எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்றிருக்கின்றது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான அனைத்துலக வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துலச் சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகின்றது. டீசரில் ஜூன் 1-ஆம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது.
அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காகப் புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களைக் கொண்டுள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
March 1, 2025, 2:19 pm
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை
January 21, 2025, 2:45 pm
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
January 18, 2025, 11:38 am