நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்

வாஷிங்டன் : 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-கின் ஸ்டார்ஷிப் செயற்கைக்கோளானது இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த, அளவில் பெரிய ராக்கெட்டாகும். 

மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தச் ராக்கெட்டை உருவாக்கியது. இதனிடையே இந்தச் செயற்கைக்கோளின் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் முதல் முறையாக சோதனைக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன்படி ராக்கெட் விண்ணில் பாய்ந்து முதல் மூன்று நிமிடங்கள் கழித்து, அதன் பூஸ்டரில் இருந்து தனியே பிரிய வேண்டும். எனினும், ராக்கெட் தொடர்ச்சியாக சுழன்று அதன்பின் நடுவானில் வெடித்துச் சிதறியது.

மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு விண்ணில் பாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.

முதல் சோதனை ஓட்டம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, சில மாதங்களில் அடுத்த சோதனை நடைபெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ஷிப்-இன் சோதனை ஓட்டத்தை ஒட்டி, ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு வாழ்த்துக்கள். இதில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன், சில மாதங்களில் அடுத்த சோதனை ஓட்டம் நடைபெறும் என்று எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம்: நியூயார்க் டைம்ஸ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset