செய்திகள் விளையாட்டு
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி: ஜோகோவிச், ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது.
வருகிற 29-ஆம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4ஆவது சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 4-ஆவது சுற்று போட்டி ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4-6, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் ரூனேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 4:01 pm
இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது
October 24, 2025, 11:20 am
2026 உலகக் கிண்ணம்: 212 நாடுகளின் ரசிகர்களிடம் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
October 24, 2025, 11:16 am
சாலா மோசமான வீரர்களில் ஒருவராக முத்திரை குத்தப்படுகிறார்: ஸ்கோல்ஸ்
October 23, 2025, 10:08 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2025, 10:07 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
