நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிறிஸ்துமஸுக்கு முன்பு அமோரிம் பணி நீக்கம் செய்யப்படலாம்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட் மேலாளர் பதவியிலிருந்து ரூபன் அமோரிம் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று ஜேமி காராகர் கூறியுள்ளார்,

அதே நேரத்தில் கிளப் எப்போது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சீசனின் ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு அமோரிம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளார், 

சீசனில் அணியில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்த போதிலும் கடந்த சீசனில் 15ஆவது இடத்தைப் பிடித்தார்.

சனிக்கிழமை மென்செஸ்டர் யுனைடெட் அணி சன்டர்லேண்டை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இதன் மூலம் 40 வயதான மேலாளரின் மீதான அழுத்தம் ஓரளவு குறைந்தது.

இந்த வெற்றியின் மூலம் யுனைடெட் அணி சர்வதேச இடைவேளைக்கு முன்பே லீக்கை 10ஆவது இடத்தில் முடித்தது.

இதுவரை மூன்று வெற்றிகள், ஒரு டிரா, மூன்று தோல்விகளை மென்செஸ்டர் யுனைடெட் சந்தித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் கிறிஸ்துமஸுக்கு முன்பு அமோரிம் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset