நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டின்போது பணிபுரிவோருக்கு மனிதவள அமைச்சர் பாராட்டு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தில் வேலை செய்வோரை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) பாராட்டியுள்ளார்.

மரின் பரேட் (Marine Parade) தொகுதியில் போக்குவரத்து துறையைச் சார்ந்தோரை அங்கீகரிக்கும் வகையில் நடந்த SMRT நிறுவனத்தின் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

விடுமுறைகாலத்தையொட்டி கூடுதலான ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் பலர் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், பல முக்கியச் செயல்பாடுகள் தொடர்வதை உறுதிசெய்யும் ஊழியர்களைப் பற்றி திரு டான் பேசினார்.

சில்லறை வணிகங்களில் பெரும்பாலும் அவற்றின் தலைமையகத்தைச் சேர்ந்த சுமார் 500 ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நேரங்களையும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கருத்திற்கொண்டு அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

போக்குவரத்து துறை, சுகாதாரப் பராமரிப்பு, பேரங்காடிகள் போன்றவை சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது செயல்படுகின்றன.

FairPrice நிறுவனம் சீனப் புத்தாண்டின் முதல்நாளில் 151 கடைகளைத் திறந்துவைத்திருந்தது.

அவற்றுள் 42 பேரங்காடிகள் 24 மணி நேரம் செயல்படுகின்றன. அதிகமான வாடிக்கையாளர்களை எதிர்பார்த்த நிறுவனம், கூடுதலாக 500 ஊழியர்களைப் பணியமர்த்தியது.

FairPrice, முழு நேர ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்ட ஆண்டுக்கு 300 வெள்ளிவரை சன்மானம் வழங்குகிறது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset