நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பூங்காவுக்கும் தெருவுக்கும் இசைமுரசு நாகூர் ஹனிஃபா பெயர்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை:

இசை முரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவுக்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு’ என்றும், சில்லடி கடற்கரையில் அமைய உள்ள பூங்காவுக்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயர் சூட்டி அரசாணை வெளியிட்டார்.

இசைமுரசு அவர்களுக்கு சிறப்பு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை, இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

நாகூர் ஹனீஃபா அவர்களின் மகன் நௌஷாத், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்து தனது இறுதி மூச்சு வரை அக் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் நாகூர் ஹனிஃபா என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset