நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் டிசம்பர் 24 வரை மழை பெய்யும்; சென்னையில்  பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்  

சென்னை:

தமிழகத்தில் டிசம்பர் 24 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

நேற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 17.30 மணியளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (21-12-2024) 08.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன்பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

21-12-2024 முதல் 24-12-2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்பதால், வெளியில் செல்லும் மக்கள்  பாதுகாப்பு கவசங்களை கொண்டுசெல்லலாம். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset