செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னைப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்
சென்னை:
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வரும் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை வழங்கப்படும். அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும்.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள், அடையாள அட்டைகளை புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று, 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 19, 2024, 5:49 pm
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
December 19, 2024, 12:58 pm
தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் கேரளா: கழிவுகளை அகற்றும் செலவை வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
December 18, 2024, 9:12 am
இரட்டை இலை சின்னம் யாருக்கு?: விரைவில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
December 17, 2024, 8:01 pm
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முஹம்மது இஸ்மாயில் எச்சரிக்கை
December 15, 2024, 9:25 pm
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக: எடப்பாடி பழனிசாமி சாடல்
December 15, 2024, 9:17 pm
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
December 14, 2024, 2:18 pm