நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான கர்நாடக இசை, யோகா வகுப்புகள்: புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோலாலம்பூர்: 

எதிர்வரும் ஜனவரி 2025ஆம் ஆண்டு முதல் கர்நாடக இசை, யோகா வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குநர் விஜயலட்சுமி சந்தரராஜன் கூறினார் 

இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தை அனைத்து இந்தியர்களும் உணர்ந்து பயனடையும் விதமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் 

மலேசியா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் உள்ள கலை, கலாச்சார அம்சங்களை தொடர்ந்து விளம்பரப்படுத்திம் நடவடிக்கையில் NSCBICC இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய வெளியுறவு துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் ICCR எனப்படும் இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மன்றத்தின் மேற்பார்வையில் இந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் செயல்பட்டு வருகிறது 

ICCR யின் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக இசை ஆசிரியர் ஶ்ரீகுமார் ராமகிருஷ்ணன், யோகா ஆசிரியர் சந்தீப் ஷலிக்ரம் ஆகியோர் முறையே கர்நாடக இசை, யோகா வகுப்புகளை நடத்துவார்கள். செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெறவுள்ளது 

ஆழ்ந்த புலமை முதல் அடிப்படை வரையிலான வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. மேல் விபரங்களுக்கு NSBICC அலுவலகத்தை 03-2276 3492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும், nscbicc.kl@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset